முஸ்லிம் மக்களே இதை கட்டாயம் படியுங்கள்! தமிழர்களே படிக்க வேண்டாம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 21, 2019

முஸ்லிம் மக்களே இதை கட்டாயம் படியுங்கள்! தமிழர்களே படிக்க வேண்டாம்

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முதலிருந்து சுதந்திரமடைந்த பின்னர் வரை இனங்களுக்கிடையே முறுகல் நிலையும் கலவரங்களும் காலம் காலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மூவின மக்களும் நீண்ட நெடிய காலத்திற்கு ஒற்றுமையாக ஐக்கியத்தோடு வாழும் சூழல் உருவாக்கப்பட்டதில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் அதன் நிலைமை தொடர்கின்றது. சிங்களவர் தமிழர் இன முறுகல், சிங்களவர் முஸ்லிம் இனமுறுகல், தமிழர் முஸ்லிம் இனமுறுகல் என்று இலங்கை பல பிரிவுகளாக கலகங்களைக் கண்டு கொண்டிருக்கிறது.

அபிவிருத்தியடைந்து சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை இன்னமும் ஆரம்பப் புள்ளியிலேயே நிற்பது வேதனைக்குரியது.

உண்மையில் இலங்கை சிறுபான்மையினங்கள் தங்களுக்குக்குள் ஒற்றுமைப்பட்டு தங்களின் தேவையை அரசுடன் மோதி வென்று அதன் மூலமாக தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளப்பாடுபட வேண்டும்.

ஆனால், இலங்கை சிறுபான்மை இனமாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் எப்பொழுதும் ஒன்றுபட்டதாக தெரியவில்லை. விட்டுக்கொடுப்பிற்கு என்பது அகராதியிலேயே இல்லை என்பது போலாகிவிட்டது.இவ்விரண்டு சிறுபான்மை இனங்களும் விட்டுக் கொடுத்துச் சென்று இருந்திருந்தால் இலங்கையில் பிரச்சினைகள் ஓரளவுக்கு தீர்க்கப்பட்டிருக்கும் அல்லது அதிகாரங்களை பெற்றுக் கொண்டிருக்க முடியும். எனினும் அது சாத்தியமற்றதாகப் போய்கொண்டிருக்கிறது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கோரி தேரர் தலைமையிலான தமிழர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தவர்களும் களத்தில் இறங்கி போராடுவது வேதனைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.

தமிழ் முஸ்லிம் மக்கள் இருவரும் மொழியால் இணைந்தவர்கள். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணன் தம்பி உறவுக்காரர்களாக செயற்பட வேண்டியவர்கள். ஆனால் எதிரும் புதிருமாக இருப்பது கசப்பானதாக இருக்கிறது.

உண்மையில் கல்முனை விவகாரத்தை மிகச்சாதாரணமாக தீர்த்து வைத்திருக்க முடியும். எனினும் அதனை பெரும் பூதாகரமானதாக்கி, பிரச்சினையை வேறு திசைக்கு கொண்டு செல்கிறார்கள். மக்களைப் பீதியடையச் செய்து பெரும் கலவரத்திற்கு வித்திடும் நிகழ்வுகளே நடக்கின்றது.

அண்மையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகம் தொடர்பில் தென்னிலங்கையில் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியிருக்கிறது.

ஒருபடி மேலே போய், முஸ்லிம் கடைகளில், அவர்களின் வணிக நிறுவனங்களில் எந்தப் பொருட்களையும் பெறக் கூடாது என்றும், அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகள் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கை செலுத்தும் தரப்பாக முஸ்லிம் தரப்பினர் இருக்கின்றார்கள். அவர்களின் வணிக உத்தியும், பொருளாதாரத்தில் தாக்கும் செலுத்தும் விதமும் வியக்க வைப்பவை தான். இலங்கையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை அவர்கள் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால், பெரும் வர்த்தகர்களாக இருக்கும் இவர்களிடம் அதிகளவான உறவினையும், பொருளாதாரத் தொடர்பினையும் மேற்கொள்வது தமிழர் தரப்பினர் என்பதை முஸ்லிம்கள் எப்பொழுதும் மறந்துவிடக் கூடாது.

எவ்வளவு முரண்பாடுகள் நமக்குள் விதைக்கப்பட்டு, அது வளர்க்கப்பட்டாலும், அதனை வேறருத்து வெற்றி பெறுவதை நாம் நோக்கமாக கொண்டிருக்கி வேண்டும்.

இன்று முஸ்லிம் வர்த்த நிறுவனங்களில் எந்தப் பொருட்களையும் வாங்கதீர்கள் என்று பகிரங்கமாக அறிக்கையும், எச்சரிக்கையும் விடும் போதும், தமிழ் மக்கள் தங்கள் சகோதரத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் இதனை பொருட்படுத்தவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் ஒற்றுமையாக பலமாக இருக்க வேண்டியவர்கள் இன்று எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெற்றியை சுவைக்கும் தரப்பாக இருக்க வேண்டிய முஸ்லிம் தமிழர் தரப்பு முட்டிமோதிக் கொண்டிருக்கிறது.

கல்முனை விவகாரம் மிகச்சாதாரணமானது. அதனை அவர்கள் இலகுவாக தீர்க்க முடியும். இருப்பினும் ஏன் தடுக்கிறார்கள்? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? தமிழ் முஸ்லிம் பிரிவினைகளை ஏற்படுத்தி இரு இனங்களையும் பிரித்து வைக்கும் தந்திரத்தை எப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள் பேரினவாதிகள் என்பதை இஸ்லாம் தரப்பு சிந்திக்க வேண்டும்.

இன்றுமட்டுமல்ல காலம் உள்ளவரை பெரும்பான்மை தரப்பினால் அடித்து விரட்டும் போதெல்லாம் கரம் கொடுப்பவர்கள் தமிழர்களாகத் தான் இருப்பார்கள்.

அவர்களோடு ஒன்றித்து பகிர்ந்து வாழ்வதே இன்றைய காலகட்டத்தில் சிறப்பானதாகும். இல்லையேல் முஸ்லிம் தமிழர் என்று பிரிந்து நின்று பெரும்பான்மை சமூகத்திடம் பெரும் அடியைப் பெற்றுக் கொள்ள வேண்டிவரும்.

தமிழர்களும் இதை உணர்ந்து செயற்பட வேண்டும் அல்லது நாணாட கொது்துத்தான் மனைவிக்கும் - மகளிற்கும் பிடிக்கும் என்றால் என்ன செய்வது.