நட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

நட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்!


பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு  புதிய பேரூந்து  சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட   மல்லாவி  தனியார் பேரூந்து  சங்கம் அறிவித்துள்ளது.

 NP-JF 9739 என்ற  இலக்கத்தை  உடைய தனியார்  பேரூந்து  காலை 07.00 மணியளவில்   நட்டாங்கண்டலிலிருந்து ஆரம்பித்து துணுக்காய்-கோட்டைகட்டி ஊடாக அக்கராயன் சந்தியை  காலை 09.15 க்கு  வந்தடைந்து ,ஸ்கந்தபுரம் - முட்க்கொம்பன் வழியாக பூநகரி - சங்குப்பிடி  ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என்று  முல்லைத்தீவு மாவட்ட   மல்லாவி  தனியார் பேரூந்து  சங்கம் அறிவித்துள்ளது.
பின்பு  யாழில் இருந்து  மதியம் 12.15 க்கு  அதே வழியூடாக முட்க்கொம்பன்-அக்கராயன் துணுக்காய் ஊடாக நட்டாங்கண்டலை வந்தடையும் என்றும் அறிவித்துள்ளது