முடிவுக்கு வருகின்றது கல்முனை போராட்டம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

முடிவுக்கு வருகின்றது கல்முனை போராட்டம்?


குழப்பங்களின் மத்தியில் கல்முனை வடக்கு முன்றலில் நடந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. போராட்டகார்கள் எழுந்து செல்ல முடிவு செய்துள்ளதுடன் தமக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்துவருகின்றனர்.

நேற்று ஞானசார தேரர் நடத்திய சந்திப்பின் பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்த போதும் உண்ணாவிரதிகளிடம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை மீண்டும் குழப்பங்களின் மத்தியில் ஒருவர் மட்டும் போராட்டத்தை தொடர பிக்குகள் உள்ளிட்ட குழு நீராகரத்துடன் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்திருந்தனர்.


இந்நிலையில் இன்று காலை நடத்திய காவல்துறை அதிகாரிகள் சந்திப்பின் பின்னரே கைவிடும் முடிவுக்கு வந்ததாக அங்கிருந்து கிடைக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலில் உள்ள வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு என்பது எய்த வகையில் நிலத் தொடர்புகள் அற்ற 3 துண்டுகளை உடைய ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகவே உள்ள நிலையில் அருகே உள்ள கல்முனையை மட்டும் ஏன் தனி பிரதேச செயலாளர் பிரிவாகப் பிரிக்க முடியாதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்புகின்றார்.
வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலில் உள்ள வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு என்பது எய்த வகையில் நிலத் தொடர்புகள் அற்ற 3 துண்டுகளை உடைய ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகவே உள்ள நிலையில் அருகே உள்ள கல்முனை வடக்கை மட்டும் ஏன் தனியாக பிரிக்க முடியாது. நிச்சயமாக பிரிக்க கூடியதும் பிரிக்க வேண்டியதுமான ஓர் பிரதேச செயலகம்.
இதேநேரம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு என ஓர் பிரிவு உள்ளபோதும் அதற்கான பிரதேச செயலக அலுவலகம்கூட அதன் எல்லைப் பரப்பிற்குள் கிடையாது. மாறாக வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே இயங்குகின்றது. கல்முனையில் புவியியல் அக்கறைதான் முக்கியமாக கூறப்படுவது உண்மையானால் இந்த வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் பிரிவும் இனத்தின் அடிப்படையில்பிரிக்கும்போது இவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தமை சுயநலத்திற்காக என்பதனையும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.


இதனிடையே இன்று பிற்பகல் யாழ்.நகரிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.