விசாரணை வளையத்துள் மைத்திரி,ரணில்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

விசாரணை வளையத்துள் மைத்திரி,ரணில்!உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் விசாரணைகளும் முடக்க நிலையை சந்தித்துள்ளது.விசாரணையின் போது சாட்சியமளிக்க மைத்திரி மற்றும் ரணிலை அழைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

இதனிடையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று, தெரிவுக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின் குறித்த தெரிவுக்குழுவுக்கு வருமாறு, பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மைத்திரியை தானாக வருகை தந்து வாக்குமூலமளிக்கும் பொறிக்குள் தள்ள முற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.