காலி மாவட்டத்தில் இருந்து, தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாற்றம்பெற்றுவந்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தரவின் பிரகாரம், மத வழிபாடுகளுடன் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக அவர் தமது பதவியை பொருப்பேற்றுக்கொண்டார்
பதவியேற்பின் அவருக்கு பொலிஸ் அணிவகுப்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மத குருமார்கள், பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், என பலர் கலந்துகொண்டிருந்தனர்