வியாழேந்திரனுடன் போராட்டத்தில் இணைதுள்ளார் அம்பிட்டிய சுமங்கள தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 1, 2019

வியாழேந்திரனுடன் போராட்டத்தில் இணைதுள்ளார் அம்பிட்டிய சுமங்கள தேரர்

நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடன் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று வியாழேந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்நிலையில் அதைனத் தொடர்ந்து போராட்டத்தில் சுமங்கள தேரரும் பங்கெடுத்துள்ளார்இணைந்துள்ளார்.


அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி அதுரலிய ரத்ன தேரர் குறித்த விடயத்தை முன்னிறுத்தி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அவரின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரரின் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சுமங்கள தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.