வவுனியா ஓமந்தை மாணிக்க இழுப்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
விபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் சி. வையாபுரிநாதன் மற்றும் அவரது துணைவியார்,மற்றும் அவர்களது பேரப்பிள்ளை ஆகியோரே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.
இந்நிலையில் அதிஅப்ரின் துணைவியார் நேற்று வைத்தியசாலையில் உயிரிழ்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து அதிபர் வையாபுரிநாதன் மற்றும் அவரது பேரானாரான 19வயதுடைய சாருஜன் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சாருஜன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்தவர் வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.