இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்தப் புத்தர் நிலை வெண்தேக்கு மரத்தில், கையால் செதுக்கப்பட்டதாகும். இதனைச் செதுக்க இரண்டு ஆண்டுகள் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியான முத்திரை என அழைக்கப்படும், யோக நிலையில் புத்தர் அமர்ந்திருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தர் சிலை, ஒரு சிறப்பு நண்பரிடம் இருந்து கிடைத்த சிறப்பு பரிசு என்று இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.