இந்திய பிரதமர் மோடிக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வாகனத்துக்குள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சில மணித்தியாலங்களே தனது விஜயத்தை அமைத்துக் கொண்ட பிரதமர் மோடியின், காலத்தைக் கருத்தில் கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து – கொழும்பு நோக்கிச் செல்லும் வரையுள்ள நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமர் மோடியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.