களனி - பொல்ஹேன - ருக்மல் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார்.
இதன்போது குறித்த, விளக்கு கவிழ்ந்ததில், 74 வயதுடைய வயோதிபப் பெண் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.
இவர், வீட்டில் தனிமையாக இருந்துள்ள நிலையிலே, குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.