தமிழர் தாயக பகுதிகளில் இயற்கை வளங்களை சூறையாடும் விசமிகள்! பொலிஸார் கண்டுகொள்ளாதது ஏன்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 15, 2019

தமிழர் தாயக பகுதிகளில் இயற்கை வளங்களை சூறையாடும் விசமிகள்! பொலிஸார் கண்டுகொள்ளாதது ஏன்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் பேராறு கிராம அலுவலர் பிரிவு பகுதியில் காணப்படுகின்ற பேராற்றில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்திலே எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் மணல் அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. ஆற்றங்கரையிலே குவித்து வைத்து விட்டு இரவு வேளையிலேயே சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றி வெளி இடங்களுக்கு கொண்டு செல்வதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் குறித்த நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு திணைக்கள அதிகாரிகளோ அல்லது பொலிசாரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.

எனவே குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை பொலிசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தங்களுடைய இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு ஒத்தாசை வழங்குமாறு மக்கள் கோரி நிற்கின்றனர்.

குறிப்பாக இந்த ஆற்று பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.