இதுதான் இலங்கை என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 15, 2019

இதுதான் இலங்கை என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!!சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது கொழும்பில் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

நடப்பது நல்லாட்சி அரசு. அதனை பெருமையுடன் தாங்கிப் பிடிப்பது தமிழ் தலைமைகள்.

ஆனால் அந்த ஆட்சியில் தமிழ் மக்கள் வாழமுடியாமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் அவலம்.

புலிகளை அழித்தால் நாட்டில் வசந்தம் வரும் என்றார்கள்.  ஆனால் புலிகளின் காலத்தில் ஒரு தாய்கூட வறுமையின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்யவில்லை.

புலிகளை அழிப்பதற்கு பல்லாயிரம் கோடி ரூபாக்களை செலவு செய்தவர்கள் இன்று நாட்டு மக்களுக்கு செலவு செய்யாமல் தற்கொலை செய்ய விடுகிறார்கள்.

தமிழுக்கு பல தலைவர்கள் இருக்கிறார்கள். பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கு பதவியும் பங்களாக்களும் பெறுவதில் குறியாக இருக்கிறார்களே யொழிய யாரும் தமக்கு வோட்டு போட்ட மக்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை.

கேட்டால் ஒரு வருடத்தில் தீர்வு வரும் அல்லது இந்தியா வரும் என்று கதை சொல்வார்கள்.

இந்த நாய்களை துப்பாக்கி ஏந்தி சுட்டால் உடனே பயங்கரவாதம் என்று சர்வதேசம் ஒப்பாரி வைக்கிறது.

ஆனால் இந்த மக்கள் தற்கொலை செய்யும்போது நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

இதுதான் நாடு என்றால் வீசும் காற்றில் விஷம் பரவி அனைவரும் செத்து ஒழியட்டும்.

குறிப்பு – சிறுவர் பாலியலில் இலங்கை முதலிடம். இது குறித்து எந்த மதவாதிக்கும் வெட்கம் இல்லை.