தூக்கிலிட மைத்திரி தயார்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 25, 2019

தூக்கிலிட மைத்திரி தயார்?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இம்மாத இறுதியில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையில் அதற்கான இடம் தயார் செய்யப்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது.

எந்தவித எதிர்ப்புக்கள் வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி ஏற்கனவே பல தடவைகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது