வவுனியா பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா சந்தைக்குச் சென்ற விவசாயி மீது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30மணியளவில் பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா நகரிலுள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் மரக்கறிகளைக் ஏற்றிச் சென்ற விவசாயி ஒருவர் மீது மாமடுவ வீதியிலுள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் அப்பகுதியைச் சேர்ந்த 58வயதுடைய டொன்டடி ஆரியவம்ச என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் பொஹஸ்வாவே பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.