எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவிடம் கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு விதத்திலும் தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்காலத்தில் சமூகத்தில் பிரதான தலைப்பாக மாகாண சபை தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஏதாவது சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்காக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்