திருச்சி மத்திய சிறை வளாகம் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், 4 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தங்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும், வழக்கை முடித்து விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்துவிட வேண்டும் என கூறி இலங்கைத் தமிழர்கள் பாஸ்கரன், ரமேஷ் ,அருளின்பதேவன், செல்வம் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் 8 நாட்களாக தொடர் போராட்டத்தீ ஈடுபட்டுவந்த , 4 இலங்கை தமிழர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டடுள்ளது.
அவர்களது கோரிக்கையை ஏற்று 15 நாட்களில் அவர்கலை விடுதலை செய்வதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்ததை அடுத்து வர்கல் உன்ணாவிரத்தத்தினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.