நாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, June 23, 2019

நாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போது மக்களினால் தேர்தெடுக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிள மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அவிஸ்ஸாவெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டிற்கு தேவை நாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஏனைய கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பொது வேட்பாளரின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.