சர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

சர்வதேச கடலில் இலங்கை கப்பல்கள் மீது தாக்குதல்

சர்வதேச கடலில் கடற்றொழிலுக்காக சென்ற 10 படகுகளுக்கு, கப்பல்கள் சிலவற்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச கடலில் மீன்கள் செறிந்து காணப்படும் பகுதியிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

செஹான், செனுர, சந்தலி, ஈசானி, ரான் குருல்லா, ஹிருனி 1 என்ற படகுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சர்வதேச நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.