மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 15, 2019

மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் – பிரதமர்


பயங்கரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயரிய பொசன் பூரணை தினத்தில் உண்மையான தர்மத்தின் ஆழமான உயர்ந்த பெறுமானங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிப்புறச் சடங்குகள் மூலமன்றி தர்மத்தின் உண்மையான மையக் கருத்தினைக்கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக்கொள்வோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.