ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளது பொதுஜன முன்னணி! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, June 15, 2019

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளது பொதுஜன முன்னணி!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

அவ்வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் இடம்பெறவுள்ள தமது கட்சியின் தேசிய பொது கூட்டத்தின்போது ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகவுள்ளோம். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்சியின் தேசிய பொது சம்மேளனம் கூடவுள்ளது.

இதன்போது எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக கடந்த மாதம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் பொதுஜன முன்னணி சார்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.