பாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள்; தமிழ்நாடும் சிறைக்கூடம்தான்; திருமுருகன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 9, 2019

பாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள்; தமிழ்நாடும் சிறைக்கூடம்தான்; திருமுருகன்!

புழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு தமிழ்னப்படுகொலைக்கான நினைவேந்தல்  நிகழ்வு சென்னை தமிழர் கடலில் ( மெரினா) அனுமதி மறுக்கப்பட்டதனால் சேப்பாக்கம் மைதானம்  அருகில் பேரணியோடு நினைவேந்தல் கூட்டமும் நடைபெற்றது. பாலச்சந்திரன் படம் தாங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்திருந்தனர் இங்கு உரையாற்றிய திருமுருகன்

சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றிய அரசே  மெரினாவில் "நினைவு தூண்"  அமைக்கும் வரை மே17 இயக்கம் தொடர்ந்து போராடும்.
ஏனென்றால் சிங்காரவேலன் ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக வருடா வருடம் நினைவேந்திய இடம் இந்த மெரினா.
தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழர்க்கே"
என்று முழங்கிய இடம் இந்த மெரினா.
தமிழர் கடலை(மெரினா) மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்துக் கொண்டே  இருக்கும் என்றார்