மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 17, 2019

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!


மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி, சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு– பங்குடாவெளி, பெரியவெட்டை எனும் பகுதியிலுள்ள வயற் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த விவசாயி, இடி, மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.