தொடர்ந்தும் முன்வரிசை? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 17, 2019

தொடர்ந்தும் முன்வரிசை?

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனம் வழங்கப்படும் என பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு வழமை போன்று முன்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகிய உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் முன்வரிசையில் அமர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏனைய உறுப்பினர்கள் அவர்களின் சிரேஷ்ட தன்மை அடிப்படையில் பின்வரிசையில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே இந்த ஆசனப்பகிர்வு இடம்பெற்றுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது