கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் இன்று கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக களமிருங்கியிருந்தனர்.
ஒரு பக்கம் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் கூடிவருகின்ற நிலையில், சர்ச்சையான கருத்துக்களும் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
தேரர்கள் கட்டிலில் படுத்து உறங்குவது போல போன்ற புகைப்படமும் வைரலாகி வருகின்றது. போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் சொகுசாக கட்டிலில் படுத்திருக்கின்றனர்.
போராட்டம் தான் உண்மையில் நடக்கின்றதா? அல்லது நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்த இவ்வாறு நடக்கின்றாதா என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்படியாக சர்ச்சைகள் ஒரு புறம் தொடர்கின்ற நிலையில், தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் அறிவித்திருந்தார்.
பொறுத்திருந்து பார்ப்போம் நாளை அப்படி என்ன அதிரடி தகவல்கள் வெளிவரப்போகின்றது என்று.