ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்களின் அனுமதியைக் கோரும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் டிசெம்பர் 7ஆம் நாளுக்கு முன்னதாக அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் வகையில், பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விட சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அவரது இந்த யோசனைக்கு, சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சாதகமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும், சிறிலங்கா அதிபரின் சட்ட ஆலோசகர் இந்த நகர்வு குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கோரும் பொதுவாக்கெடுப்பை நடத்தும் இந்த திட்டத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
திட்டமிட்டபடி முதலில் அதிபர் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்று இந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.