நேற்றுக் காலை பிரதமரின் செய்தியுடன் கல்முனை ஆர்பாட்டக்காரர்களைச் சந்தித்த நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அமைச்சர் தயாகமகே போன்றவர்களை போராட்டக் களத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றியிருந்தார்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள்.
கல்முனை பிரதேசசெயலக தரமுயர்த்துக்காக இடம்பெறும் உண்ணாவிரத இடத்திற்கு சென்ற சுமந்திரனின் செப்பு நடுவால கிழிஞ்சி நடு ரோட்டில் கிடப்பதாக தகவல் ஆனால் இது அவருடையது தானா என முழுமையாக உறுதிப்படுத்த முடியாது இருந்தாலும் அவர் செருப்பு இல்லாமல் வாகனத்தில் ஏறியது அவதானிக்கப் பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட விபரீதத்திற்கான முழு பெறுப்பையும் கூட்டமைப்பு ஏற்க வேண்டும் காரணம் இப்படியான ஒரு தகவலை தாங்கி செல்வதற்கு முன்னர் கூட்டமைப்பின் கல்முனைப்பகுதி முக்கியஸ்தர்களையும் ஒருங்கமைத்து இந்த வேலைத் திட்டத்தை முன் நகர்த்தி இருக்க வேண்டும்.
குறிப்பாக முன்னாள் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் மற்றும் கலையரசன் - கல்முனை மாநகர சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேன்றோரையும் அழைத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றிருக்க வேண்டும் அதை விடுத்து யாழ்ப்பாணத்தில் சுமந்திரனிற்கு பின்னால் திரியும் அடி வால்களைப் போன்ற அரசியல் தத்துக் குட்டிகளை கூட்டிக் கொண்டு சென்றதன் விளைவே இதன் பின்னடைவிற்கு முதற் காரணம்.
அத்துடன் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழு கூட்டங்களில் கதைப்பது போன்ற தெனியில் சுமந்திரன் கதைக்க முற்பட்டதுடன் அரசின் தகவலை கொண்டு வந்துள்ளேன் என கூறியதன் விளைவு அமைச்சர் மனோ கணேசன் மிக பக்குவமாக இந்த இடத்தில் கதாநாயகனாக மாறிவிட்டார்.
பிரதமரின் செய்தியை வாசிக்க சுமந்திரன் அமைச்சரா அல்லது அரச பிரதிநிதியா இல்லை இந்த இடத்தில் செய்தி வாசித்திருக்க வேண்டியவர் அமைச்சர் மனோ.
இந்த அடிப்படை அறிவு கூட்டமைப்பிற்கு ஏன் இல்லாமல் போனது.
அடுத்த குழப்பத்திற்கு காரணம் அமைச்சர் தயா கமகே ஏனனில் முதலில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து இருக்க வேண்டும் ஆனால் முஸ்லிம்களை சந்தத்து விட்டு தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் வந்து நியாயம் கூற முற்பட்டது தமிழர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியது.
ஒட்டு மொத்தத்தில் இந்த சிக்கலை ஊதி பெரிதாக்கி மானபங்கப் பட்டது கூட்டமைப்பு .
கூட்டமைப்பின் அணுகு முறையில் ஏற்பட்ட தவரே இந்த குழப்பத்திற்கு பிரதான காரணம்.
இந்த தவறை திருத்தி மக்களை அறுதல் படுத்த 24 மணித்தியாலத்தில் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ள தவறுமாக இருந்தால் வரலாற்று ரீதியான பின்னடைவவை யாரும் தடுக்க முடியாது.
இந்த வியாதி வெகு விரைவில் மட்டக்களப்பு பகுதியையும் அண்மித்து இதே ஒரு நிலை மட்டக்களப்பில் வருவதற்கான அறிகுறிகள் இருப்பதும் கூட்டமைப்பு அறிந்திருக்க வேண்டிய தகவல்.