ஊருக்கு உபதேசம்: உனக்கில்லை ராசா? - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, June 7, 2019

ஊருக்கு உபதேசம்: உனக்கில்லை ராசா?

நிமிடத்திற்கொரு தடவை வீர வசனங்களை உதிர்த்துக்கொள்ளும் தமிழரசுக்கும்பல் தங்கள் தனிப்பட்ட வருவாய் தரும் அலுவல்களிற்கு யாருடைய காலிலும் விழ தயாராகவேயுள்ளன.

ஏற்கனவே தனது மகளது பிறந்த நாளிற்கு மைத்திரியை வரவழைத்து மகிழ்ந்த சரவணபவன் பின்னர் ரணில் காலில் வீழ்ந்து அதே மகளிற்கு வேலையும் வாங்கிக்கொண்டார்.

இன்னொருபுறம் சிறீதரனோ தியேட்டர்இஎரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் புதிய மதுபானச்சாலைக்கான அனுமதியென மும்முரமாகியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது மூன்றாவது வைத்தியசாலையினை மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சர்ச்சைக்குரிய வவுனியா பிக்குவொருவரை கொண்டு திறந்துவைத்துள்ளார்.

கொழும்பில் ரணில் தரப்புடன் இணைந்து கல்லா கட்டுவதாக சுமந்திரனை இத்தரப்புக்கள் திட்டி தீர்த்துக்கொள்கின்ற அதேவேளை சத்தமின்றி தமது கடைகளையும் சாதுரியமாக விஸ்தரித்துவருவதாக ஆதரவாளர்கள்  புறுபுறுத்ககொள்கின்றனர்.