ஞானசார தேரர் தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு படையெடுக்கும் மக்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, June 3, 2019

ஞானசார தேரர் தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு படையெடுக்கும் மக்கள்


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய நடைபவனி ஒன்று தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாபெரும் போராட்டம் இன்றைய தினம் கண்டி நகரில் இடம்பெற்றது.

இதன் பின்னர் பெருமளவான மக்களின் ஆதரவுடன் ஞானசார தேரர் தலைமையில் குறித்த நடைபவனி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.