முடங்கியது கண்டி! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, June 3, 2019

முடங்கியது கண்டி! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகை

உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மக்கள் இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இதற்கு ஆதரவாக நீர்கொழும்பு பகுதியிலும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து ஆதரவுப் போராட்டத்திலீடுபட்டனர்.

அத்துடன் வரக்காப்பொவிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.