இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்க புதிய சட்டம் அவசியம் – சம்பிக்க! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 9, 2019

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்க புதிய சட்டம் அவசியம் – சம்பிக்க!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு நாட்டிற்கு புதிய சட்டம் ஒன்று அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பயங்கரவாதம் தொடர்பான பழைய சட்டங்களின் மூலமாக புதிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது.

வெளிநாட்டு இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக ஒரு அச்சம் பரப்பப்படுகிறது. ஆனால், அவ்வாறு எந்த ஒரு நிலையும் இல்லை என நான் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

இந்தப் பயங்கரவாதமானது, 50, 60 நாடுகளுடன் பரவியுள்ளது என்பதனால், வெளிநாட்டு புலனாய்வுத் துறையுடனான தொடர்பு அவசியமாகிறது.

எவ்வாறிருப்பினும், இலங்கையின் இறைமையை காட்டிக்கொடுத்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாரில்லை’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.