உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னால் ஐஎஸ் அமைப்பு இருக்கும் என்று தான் நம்பவில்லை எனவும், இதற்குப் பின்னால், “மறைமுக சக்தி” (Unseen Party) ஒன்றே இருந்திருக்கிறது எனவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தலாத்துஓயாவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘இந்த தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னால், உள்நாட்டு சக்திகளின் மறைமுக சக்தி ஒன்றே இருந்திருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம்.
முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கம் தொடர்பாக, உதய கம்மன்பில, பொய்யான புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.