போதை ஒழிப்பு எனவும் , குடியை விட்டுவிட்டேன் எனவும் கூறிக்கொண்டு இருக்காது ஆகக்குறைந்தது தனது அலுவலகமான ஆளுநர் அலுவலக நுழைவாயிலில்; உள்ள மதுபான சாலையை மூடமுடியுமாவென சிவில் சமூக செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதம் சவால் விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழ்ககிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் வலி.வடக்கில் இராணுவ நலன்புரி நிலையத்தில் விற்கப்பட்டும் மது விற்பனை உட்பட , வடக்கில் அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் , கோயில்களுக்கு அருகில் உள்ள மதுபான சாலைகளை ஒரு மாத காலத்திற்குள் மூட முடியுமாவென வடமாகாண ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இதனை விடுத்து வடமாகாணசபையினில் மக்களிற்கென ஒதுக்கப்பட்ட அவர்களது வரிப்பணத்தில் பலூன் பறக்கவிடுகின்றேன்.பஸ் ஓடவிடுகின்றேனென வெற்று சீன் காட்டவேண்டாமெனவும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் மது ஒழிப்பு என்கின்றனர்.இன்னொரு புறம் முல்லைதீவிலுள்ள மதுபான சாலை இயங்க அனுமதி வழங்கப்படுகின்றது.
இதன் மூலம் அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதாகவும் கணேஸ் வேலாயுதம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.