அமெரிக்காவுக்குள் குடியேறும் நோக்குடன் எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த தந்தையும் மகளும் ரியோ கிரேண்ட் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அதிபர் டிரம்ப்பின் குடியேறிகளுக்கான கொள்கைகளுக்கு எதிராகக் குரல்கள் வலுத்து வருகின்றன.
தந்தையும் மகளும் அமெரிக்க எல்லைக்குள் நுழைய மெக்சிகோ வழியாக ஆற்றில் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.
தந்தை, மகள் சடலம் ஆற்றங்கரையோரம் ஒதுங்கிய படங்கள் இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இககாட்சி மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளதாதூண்டியுள்ளதாக் கூறப்படுகின்றது