கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றில் அவர் சில விடயங்களை எழுதியுள்ளார்.
தாய் மற்றும் பிள்ளைகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை 6.20 மணியவில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.
இது திடீர் விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் எண்ணிய போதிலும் அந்த பெண்ணுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் பையில் இருந்த கடிதத்தை சோதனையிட்டு பார்க்கும் போது அது தற்கொலை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், “நான் மற்றும் எனது பிள்ளைகளின் மரணத்திற்கு தர்ஷினி ஆகிய நான் மாத்திரமே பொறுப்பு. எனது வறுமை மற்றும் சுகயீனமே இந்த தீர்மானத்திற்கு காரணம்.... இப்படிக்கு தர்ஷினி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்ற இந்த தாயார் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் 8 மற்றும் 12 வயதான மகன்களாகும்.
உயிரிழந்தவர்களின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சடங்களை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் வந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் டுபாயில் பணி செய்ததாகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அவர் இலங்கை வந்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததுள்ளளர்.
எனினும் கணவன், மனைவி, பிள்ளைகள் குறித்தும் அக்கறை இல்லை எனவும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரே அவர்களை பராமரித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.