இலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி! ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 16, 2019

இலங்கை குண்டுத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி! ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐ.எஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி இலங்கை தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமேயன்றி, தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்களல்ல என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.