கொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி போன்று நடித்த மொஹமட் நிசார் இம்ரான் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, June 2, 2019

கொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி போன்று நடித்த மொஹமட் நிசார் இம்ரான் கைது

இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜர் போன்று நடித்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய மொரட்டுவை, சொய்ஸாபுரம் வீட்டுத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டுத் தொகுதியில் வசிக்கும் மொஹமட் நிஸார் இம்ரான் எனப்படும் இந்த நபர் இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக செயற்படுவதாக கூறி பிரதேச மக்களை ஏமாற்றியுள்ளார்.

குறித்த நபர் பல்வேறு பெயர்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் காற்சட்டை, ட்ரோன் கமரா, கையடக்க தொலைபேசிகள் இரண்டு, மடிக்கணினிகள் 3 உட்பட பல உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.