வைகோவை குறிவைக்கும் பாஜக! கரும்புலிகள் நாளில் சிறைக்கு அனுப்பத் திட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 19, 2019

வைகோவை குறிவைக்கும் பாஜக! கரும்புலிகள் நாளில் சிறைக்கு அனுப்பத் திட்டம்!


தமிழகம் மட்டுமல்லாமல்  உலகமெங்கும் வாழும்  தமிழர்களும்  எதிர்பார்த்திருப்பது 20 வருடத்தின் பின் இந்திய பாரளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் வைக்கோவின்குரலை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு மாநிலங்களவை உறுப்பினரை மதிமுகவுக்கு திமுக வழங்குமென்று, அதன் அடிப்படையில் அந்த உறுப்பினர் பதவி வைகோவுக்குத்தான் என்று மதிமுக கட்சியினர் ஏகமனதாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க.

வைகோவின் பாராளுமன்ற பிரவேசம் என்பது பலரை கதிகலங்க வைத்துள்ளது குறிப்பாக தற்போதைய பாஜக அரைசை எனலாம் ஏனெனில் .மத்திய அரசால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத மீத்தேன்,நியுற்றினோ , கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற பல்வேறு  திட்டங்களை நடைமுறைப்படுத்த வைகோ இடையூறாக இருப்பார் என எண்ணுகின்றனர்.  

அவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பாராளுமன்ற புலி என பட்டம் பெற்றவர் , மக்கள் நல பிரச்சனைகளில் சளைக்காமல் குரல் கொடுப்பதோடு போராட்டங்களிலும் பின் நிர்க்கதவர்.
ராஜீவ் காந்தியை தனது வாதத் திறமையால் பாராளுமன்றத்தில் ஓட ஓட விரட்டியவர். அப்படிப்பட்ட ஒருவர் பாரளுமன்றம் வந்தால் தமக்கு பாதகமாகவும் அவமானங்களையும் சந்திக்கநேரும் என்று பாஜக கருதுவதால் நீண்டகாலமா இழுபறியில் இருந்த வைகோ மீதான தேசதுரோக வழக்கை முடுக்கி விட்டுள்ளது.

தமிழீழத்தில் சிங்கள அரசால் 2009ல் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிராக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய பிரதமருக்கு எதிராகவும் , இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வைகோமீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. வாய்தா வாங்காமல் ஒவ்வொரு அமர்வுக்கும் தான் பேசிய பேச்சில் இருந்து பின்வாங்காமல் தனது பேச்சின் நியாயப்பாட்டை விளக்கி வருகின்றார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று (19-06-2019) நடந்த சிறப்பு நிதிமன்ற அமர்வில் வாதாடிய அவரின் கருத்துக்களை கேட்ட நீதிபதிகள் எதிர்வரும் 5 ம் திகதி அதாவது கரும்புலிகள் நாளில் அதற்க்கான தீர்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இத்தனை வருடங்களாக இந்த தேசதுரோக வழக்கின் காரணமாக வெளிநாடு செல்வதற்க்கான விதிமுறைகள் உட்பட பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கி வந்த வைகோ அவர்களை தற்ப்போது பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பையும் முடக்குவதற்கானதாகவே  அமையும் என அவரின் கட்சியினர் ஏக்கத்துடன் கூறுகின்றனர்.

பல்வேறு தேர்தல் சந்தர்பங்களில் வைகோவுக்கு வெற்றி வாய்ப்புக்கள் இருந்தும் அதைதடுப்பதற்காக சதி வேலைகளில் அரசியல் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டு  நிலவளங்களை சுரண்டும் பன்னாட்டு  நிறுவனங்களும் பணத்தை வாரி இறக்கி வேலை செய்வது வழமை குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்த குழுமம். அனால் தற்போது தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்று மாநிலங்களவை மூலம் பாராளுமன்றம் செல்வதை யாராலும் தடுக்கமுடிய சூழல் உருவாகியுள்ளது. எனவேதான் நடப்பில் இருந்த  தசதுரோக வழக்கின் மூலம் வைகோவை சிறைக்குள் தள்ள திட்டம் தீட்டியுள்ளனர் பாஜகவும் பன்னாட்டு முதலாளிகளும்.

கூட்டணி கொள்கைகளில்  எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும் மக்கள் நல போராட்டங்களிலும்  தனது வாதத் திறமையால் தமிழகத்தை பாழாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் போராடி வருகிறார். 
தான் பேசிய பேச்சுகளால் தனக்கு ஆபத்து வரும் என்றால் அதை மீளப் பெற்று நீதிமன்றங்களில், முன்பிணை வாங்கிக் கொள்ளும்  அரசியல்வாதிகள் மத்தியில் பேசியதை நியாயப்படுத்தியே இன்றுவரை இந்த தேசத்துரோக வழக்கில் இருந்து விடுதலை பெறாது நிதிமன்ற படியேறி வருகிறார்.
இந்நிலையில் எதிர்வரும் யூலை 5ல் தீர்ப்பு கொடுக்கப்படவுள்ள நிலையில் வழக்கிலிருந்து நீதி கிடைப்பதோடு , விடுதலையாகி வைகோ பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதே  உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் வேண்டுகையும், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்புமாகும்.