தன்னைக் கொல்ல வந்த தேவதத்தருக்குக் கூட விகாரையைத் தடை செய்யவில்லை புத்த பெருமான். உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும். கவலையில் இருந்து நீங்கட்டும்.”
அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரை கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என கம்பஹா மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்புச் சபையின் விகாராதிபதி சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதையடுத்தே அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.