சிங்கள ராவாய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்ன தேரரினால் தெஹிவளை ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னெடுக்கப்படவிருந்த ஆர்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோளினை அடுத்து கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக ARC என்று அழைக்கப்படும் Advocacy & Reconciliation Council அமைப்பினால் பொலிஸில் இன்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேர்வின் விக்ரமரத்னவின் கவனத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் இலங்கை கொண்டுவந்ததுடன் குறித்த பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, தெஹிவலை பிரதேசத்தில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக முஸ்லிம் கவுன்ஸிலின் முக்கியஸ்தரொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்