தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகள் எந்த அரசாங்க நிதி உதவியும் இன்றி அழிந்துவரும் நிலையில் (வெள்ளை அம்புக்குறி ) சிங்களக் குடியேற்றங்கள் வீடுகள் பாரிய விகாரைகள் (சிவப்பு அம்புக் குறி ) அரசாங்க உதவியுடன் நாவற்குழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென பிரபல சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட தமிழின அழிப்புக்கான இது போன்ற ஆதாரங்களை திரட்டி ஜெனீவாவில் போராடாமல் மொழியறிவும் சட்டஅறிவும் விவாதத்திறனும் அற்ற மூடர்களை 10 வருடங்களாக தமிழர் பிரதிநிதிகளாக அனுப்பி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறோமெனவும் முரளி வல்லிபுரநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக நாவற்குழியில் சிங்கள குடியேற்றவாசிகளிற்கு வீடுகளை வழங்க மாவை.சேனாதிராசா சம்மதித்திருந்ததுடன் விகாரை அமைப்பதாற்கான அனுமதியை சுமந்திரனின் பணிப்பின் பேரில் சாவகச்சேரி பிரதேசசபை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.