குருநாகலில் புதிதாய் வெடித்த சிக்கல்! 3,900 தாய்மாரிற்கு மயக்க மருந்து - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 18, 2019

குருநாகலில் புதிதாய் வெடித்த சிக்கல்! 3,900 தாய்மாரிற்கு மயக்க மருந்து

குருநாகல் வைத்தியசாலையின் சர்ச்சைக்குரிய மகப்பேற்று நிபுணர் ஷாபி மொஹமட்டினால், சிசேரியன் சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட்ட 3,900 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியர் ஷாபி, சிங்கள தாய்மாரின் சிசேரியன் சிகிச்சையின் போது ஃபாலோபியன் குழாய்களை வெட்டி, அவர்கள் மீள கருத்தரிக்க முடியாமல் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. எனினும், இதுவரை மருத்துவரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இந்த விவகாரத்தை ஆராயும் வைத்தியசாலை நிர்வாகம், ஷாபி கடமையாற்றிய காலத்தில் சிசேரியன் சிகிச்சைக்குள்ளான பெண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2007- 2013 மற்றும் 2017 இலிருந்து இதுவரையான காலத்தில் சிசேரியன் சிகிச்சைக்குள்ளான 3,900 பெண்களை அடையாளம் கண்டுள்ளதாக குருநாகல் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 690 பேர் முஸ்லிம் பெண்கள்.

இதேவேளை, குருநாகல் வைத்தியசாலை மகப்பேற்று பிரிவில் எந்த தாய்க்கும் முன்னறிவிப்பின்றி மயக்க மருந்து வழங்கக்கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டிருந்தபோதும், முன்னறிவிப்பின்றி மயக்க மருந்து செலுத்தும்படி மயக்க மருந்து நிபணரை ஷாபி அச்சுறுத்தினார் என புதிய குண்டை போட்டுள்ளது சிங்கள ஊடகமொன்று.


அப்போது அது குறித்து நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு ஏ,பி,சி என மூன்று பிரிவுகளாக இருந்ததாகவும், சி பிரிவில் ஷாபி கடடையாற்றி வந்ததாகவும், ஆனால் ஏனைய பிரிவுகளிலும் அவர் செயற்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல் வைத்தியர் தொடர்பாக சிங்கள ஊடகங்கள் நாளாந்தம் புதிய புதிய செய்திகளை வெளியிட்டு வருகின்றபோதும், அவையெதுவும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.