மன்னாரில் மனித உரிமை பற்றி பேச்சாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 19, 2019

மன்னாரில் மனித உரிமை பற்றி பேச்சாம்?


அண்மையில் இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாகவும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நடந்துள்ளது.ஆணையாளர் அம்பிக சற்குணநாதன் தமைமையில் விசேட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரது பங்கு பற்றுதலுடன் இன்று புதன் கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. 

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவதாகவும், நடத்தப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாடு முழுவதும் அவசர கால நிலை காணப்படுவதால் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பெற்றுள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் தொடர்பாகவும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்னும் சில காணிவிடயங்கள் தொடர்பாகவும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தனி நபர்களாகவும் பொது விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடனும் இராணுவம் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகலுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்;.