விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூன்றாவது கால தொடக்கம் ஆரம்பிக்குமா என்ற சிக்கலில் உள்ளது.
ஏனெனில் எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதன் எனும் சட்டவாளர் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை ‘ indian broadcasting foundation ’ தணிக்கை சான்று பெறவெண்டும் என்றும் இல்லையேல் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சுதன். இதன் காரணமாக, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேட்டிற்கு பங்கமாக இருப்பதாகக் கூறி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. ஆபாசமாக உடைகள் அணியப்படுவதாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுவதாகவும் பல எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்க.