அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, June 1, 2019

அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் டிசம்பர் மாதம் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கியுள்ள விசேட செவ்விலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘1988 ஆம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நிலைமை படுமோசமாக இருந்தது.

பலவழிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாடே பதற்றமடைந்திருந்தது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

எனவே, குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகமே அமையும்.

நவம்பர் 9ஆம் திகதிக்கு பிறகு வரும் ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அது டிசம்பர் 9ஆம் திகதியை தாண்டிதாக இருக்ககூடாது.

ஆகவே, உடன் நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15ஆம் திகதியும், காலக்கெடுவரை காத்திருந்து நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7ஆம் திகதியும் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.