தூசு தட்டப்படும் கோத்தா வழக்குகள்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 26, 2019

தூசு தட்டப்படும் கோத்தா வழக்குகள்?கோத்தபாயவின் அரசியலை முடக்கும் என சந்தேகிக்கப்படும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு மும்முரமடைந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டிஆராச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளனர்.

கோத்தபாய தனது தேர்தல் அரசியலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவர் பின்னணியிலிருந்ததாக கொலை சம்பவங்கள் தூசு தட்டப்பட்டுவருவது தெரிந்ததே