தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 25, 2019

தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு


களனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்