கிளிநொச்சியில் கோர விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – இருவர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 25, 2019

கிளிநொச்சியில் கோர விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – இருவர் காயம்


கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவ முகாமிலிருந்து பயணித்த படையினரின் கனரக வாகனம், ரயில் கடவையின் ஊடாகச் சென்றபோது கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில் மோதியுள்ளது.

குறித்த பகுதியில் காணப்படும் தானியங்கும் மின்னொளி சமிக்ஞையை அவதானிக்காது, அந்த வீதியின் ஊடாக கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கனரக வாகனத்தில் 7 படைவீரர்கள் பயணித்துள்ள நிலையில், அவர்களில் 4 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஏனைய மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக