துபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 13, 2019

துபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்!

உலகின் மிக முக்கிய வர்த்தக நகரங்களுள் ஒன்றான துபாயில் மற்றுமொரு பிரம்மாண்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவைக் கட்டி வியப்பில் ஆழ்த்திய அதே நகரம் இப்போது பிரம்மாண்ட அருங்காட்சியகம் ஒன்றைக்கட்டி வருகிறது. இதன் பெயர் Museum of the Future. இந்த கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்னரே இதன் வடிவமைப்புக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. அப்படியென்ன வடிவமைப்பு என்கிறீர்களா? அதில் தான் விஷயமே இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் மிகப்பெரும் கண் போன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் வெளிப்புறத்தில் அரேபிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

நடுப்பகுதியில் உள்ள வெற்றிடம் தற்கால அறிவியல் கோட்பாடுகளின் போதாமைகளைக் குறிக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) கட்டுப்பாட்டில் இயங்கும்  Dubai Future Foundation என்னும் அமைப்பின் மூலம் இந்த கட்டடம் கட்டும் பணி நிர்வகிக்கப்படுகிறது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மையமாக இந்த கட்டிடம் திகழும் என அரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


உடல்நலம், காலநிலை மாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற துறைகளின் மிக முக்கிய ஆராய்ச்சிகள் இங்கு நிகழ்த்தப்பட இருக்கின்றன. சோலார் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் இங்கு எலெக்ட்ரிக் கார்களுக்கென தனியாக சார்ஜிங் சென்டர் ஒன்றும் இங்கே அமைந்துள்ளது.

துபாயின் பிரபல வடிவமைப்பு குழுமமான Killa Design தான் இந்த கட்டடத்தையும் முழுவதுமாக வடிவைத்திருக்கிறது. இதற்கான வளைவு கண்ணாடிகள், பைஃபர் சட்டங்கள் மற்றும் இரும்புகள் ஆகியவை முப்பரிமான அச்சிடல் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். இந்த நிறுவனத்தின் தலைவர்  ஷவுன் கில்லா (Shaun Killa) இந்த கட்டிடம் எதிர்கால உலகின் தவிர்க்கமுடியாத இடமாக இருக்கும் என்கிறார்.
2020 ஆம் ஆண்டு திறக்கப்பட இருக்கும் இந்த “கண்” கட்டிடம் துபாயின் எதிர்கால சுற்றுலா மற்றும் அறிவியல் துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்கிறார்கள் வல்லுனர்கள்.