நீட்டில் தேர்வானவர்களை வடிகட்ட சதியா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 13, 2019

நீட்டில் தேர்வானவர்களை வடிகட்ட சதியா!


மருத்துவப் படிப்பு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அவர்களுடைய பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களைக் கேட்பது ஏன் என மதிமுக பொதுச் செயலாளார் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா போன்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனார். இந்த நிலையில் நீட் தேர்வில் எழுதி வெற்றி பெற்றவர்கள் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றுகள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டு இருக்கின்றன. பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் கேட்க வேண்டிய தேவை என்ன? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை அல்லது ஆதார் போன்றவை இணைக்கப்பட்டால் போதுமானது.

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், மருத்துவப் படிப்பு விண்ணப்பங்களில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க வெளியிட்டுள்ள அறிவிப்பைத் திருப்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்