படு மோசமடையும் நிலை! இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, June 3, 2019

படு மோசமடையும் நிலை! இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர்

வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் மீண்டும் தற்போது எச்சரித்துள்ளார்.

கண்டி - தலதா மாளிகைக்கு முன்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.